சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை வருமான வரி அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
Posted On:
15 AUG 2023 2:51PM by PIB Chennai
77வது சுதந்திர தினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையால், 15 ஆகஸ்ட், 2023 அன்று நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டது. சென்னை, வருமான வரித்துறை வளாகத்தில் நடந்த விழாவில், காலை 08.30 மணிக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) திரு. சுனில் மாத்தூர், இ.வ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள், வருமான வரி மூத்த அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திரு. சுனில் மாத்தூர், வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) உரையாற்றுகையில், இந்த சுதந்திரத்தை நம் அனைவருக்கும் பெற்றுத் தந்த முன்னோர்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். நமது நாட்டின் எல்லைகளை இரவும் பகலும் காத்து வரும் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும் அவர் போற்றினார். மேலும், அவர் உரையாற்றுகையில், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பல அறிவியல் துறைகளில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளோம் என்றார். அவர், நமது நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும், பொருளாதாரத்தில் உலகின் 5வது பெரிய நாடாகக் கருதப்படுகிறது என்றும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பொருளுதவியை வழங்குவதில், வருமான வரித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.
2023-24 நிதியாண்டுக்கான மத்திய அரசின் மொத்த வரி வருவாயின் இலக்கு 33.6 லட்சம் கோடிகளாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது, இதில் நேரடி வரி வசூல் 18.3 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வரி வசூலில் 54 சதவிகிதம் வருமான வரித்துறையின் பங்களிப்பு ஆகும். வரி வசூல் மற்றும் வரி செலுத்துவோர் சேவைகளுடன், வருமான வரித்துறை செயல்பாட்டின் ஒரு பகுதியாக வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையும் ஒன்றாகும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வுப் பிரிவு 2022-23 நிதியாண்டில் 81 சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் ரூ.120 கோடி ரொக்கம் மற்றும் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில், கணக்கில் காட்டப்படாத ரூ.5,200/- கோடி வருமானமும் கண்டறியப்பட்டது. வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் மற்றும் வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு) அவர்கள் இந்தச் சிறந்த சாதனைக்காகத் வருமான வரித்துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
விழாவின் ஒரு பகுதியாக, சென்னை கே.எம். இசை குழுமத்தின் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தங்களது இசையால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந் நிகழ்ச்சியில் நேரடி வரிவிதிப்புத் துறையில் சிறந்து விளங்கியதற்காக வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையரின் “தகுதிச் சான்றிதழ்” (Certificate of Merit) வழங்கப்பட்டது.இந் நிகழ்ச்சியில் நேரடி வரிவிதிப்புத் துறையில் சிறந்து விளங்கியதற்காக வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வருமான வரி முதன்மை தலைமை ஆணையரின் “தகுதிச் சான்றிதழ்” (Certificate of Merit) வழங்கப்பட்டது.
***
(Release ID: 1948955)
Visitor Counter : 131