இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாகுவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 34 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிதி அளித்துள்ளது

Posted On: 14 AUG 2023 3:49PM by PIB Chennai

அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறவிருக்கும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி பங்கேற்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி அளிக்கிறது, இதில் 17 வீரர்கள் மற்றும் 17 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 34 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

துப்பாக்கி சுடும் வீரர்கள் 34 பேர், பயிற்சியாளர்கள் 15 பேர், 8 உதவி பணியாளர்கள் உட்பட 57 உறுப்பினர்களைக் கொண்ட துப்பாக்கி சுடுதல் குழுவுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

இந்த நிகழ்வில் போட்டியிடும் 34 துப்பாக்கி சுடும் வீரர்களில், 24 பேர் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம் விளையாட்டு வீரர்கள் மற்றும் 7 பேர் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 14, 2023 அன்று தொடங்கி செப்டம்பர் 1, 2023 அன்று முடிவடையும். 15 போட்டிகளில் மொத்தம் 48 ஒலிம்பிக் ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதால் பாரிஸ் ஒலிம்பிக்கில்  இந்தியா பங்கேற்க இது முக்கியமான போட்டியாகும். ஐ.எஸ்.எஸ்.எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பின் 2022 பதிப்பில், இந்தியா 12 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 34 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில் பங்கேற்கும் 34 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் -

1 திவ்யான்ஷ் சிங் பன்வார் – ஒலிப்பிக் பதக்க இலக்குத் திட்ட தடகள வீரர்

2 ரமிதா - ஒலிப்பிக் பதக்க இலக்குத் திட்ட தடகள வீராங்கனை

3. ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் - ஒலிப்பிக் பதக்க இலக்குத் திட்ட தடகள வீரர்

4. மெஹுலி கோஷ் - டாப்ஸ் தடகள வீராங்கனை

5. ஹிருதய் ஹசாரிகா - டாப் தடகள வீராங்கனை

6. டோய்லோத்தமா சென் - டாப்ஸ் தடகள வீரர்

7 அகில் ஷியோரன் - டாப் தடகள வீரர்

8 சிஃப்ட் கவுர் சாம்ரா - டாப்ஸ் தடகள வீராங்கனை

9. நீரஜ் குமார் - டாப் தடகள வீரர்

10 ஆஷி சவுக்சே - டாப்ஸ் தடகள வீரர்

11. சரப்ஜோத் சிங் - டாப் தடகள வீரர்

12 மணினி கௌசிக் - டாப் தடகள வீராங்கனை

13. ஷிவா நர்வால் - டாப்ஸ் தடகள வீரர்

14 திவ்யா டி.எஸ் - டாப்ஸ் தடகள வீராங்கனை

15 அர்ஜூன் சிங் சீமா - டாப் தடகள வீரர்

16. இஷா சிங் - டாப் தடகள வீராங்கனை

17 அனீஷ் - டாப் தடகள வீரர்

18 பாலக் - கேலோ இந்தியா தடகள வீரர்

19 விஜய்வீர் சித்து -  டாப் தடகள வீரர்

20 ரிதம் சங்வான் - டாப்ஸ் தடகள வீரர்

21. ஆதர்ஷ் சிங் - டாப் தடகள வீரர்

22. மனு பாக்கர் - டாப் தடகள வீரர்

23 பிருத்விராஜ் தொண்டைமான்

24 மனிஷா கீர் - கேலோ இந்தியா தடகள வீராங்கனை

25 கினான் செனாய் - கேலோ இந்தியா தடகள வீரர்

26 ப்ரீத்தி ரஜக் -  கேலோ இந்தியா தடகள வீராங்கனை

27 ஜோராவர் சிங் சந்து

28. ராஜேஸ்வரி குமார்

29 அனந்த்ஜீத் சிங் நருகா - கேலோ இந்தியா தடகள வீரர்

30 கனேமத் செகோன் - டாப்ஸ் தடகள வீரர்

31 அங்கத்வீர் சிங் பஜ்வா

32 பரினாஸ் தலிவால் - கேலோ இந்தியா தடகள வீரர்

33. குர்ஜோத் சிங் கான்குரா - டாப் தடகள வீராங்கனை

34 தர்ஷனா ரத்தோர் - கேலோ இந்தியா தடகள வீரர்

 

***

ANU/AP/IR/RS/KRS


(Release ID: 1948667) Visitor Counter : 162