சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS ) - சென்னை கிளை ஹால்மார்க்கிங் பற்றிய நகை வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் நடத்தியது

प्रविष्टि तिथि: 10 AUG 2023 5:36PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி . .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

           

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம் , நகை வியாபாரிகளுக்கான ஹால்மார்க்கிங் பற்றிய ஜுவல்லர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 10 ஆகஸ்ட் 2023 அன்று மயிலாடுதுறையில் இன்று நடத்தியது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் 30 நகை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

 

T. ஜீவானந்தம், இணை இயக்குநர், இந்திய தர நிர்ணய அமைவனம் (சென்னை கிளை அலுவலகம்) நகை வியாபாரிகளை வரவேற்று , நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். ஹால்மார்க்கிங் திட்டத்தின் முக்கியத்துவம், திட்டம் தொடங்கப்பட்ட பின்னணி, மற்றும் ஹால்மார்க்கிங் திட்டம் எவ்வாறு மற்றும் பல ஆண்டுகளாக அது எவ்வாறு தொடங்கப்பட்டது மெருகேறி வருகிறது என்பதை அவர் விளக்கினார். BIS ஹால்மார்க்கிங் திட்ட நடைமுறைகள், ஹால்மார்க்கிங் விதிகள் & ஒழுங்குமுறை, நகைக்கடைகளின் பொறுப்புகள், இந்திய தர நியமத்தின் விளக்கம் (IS 1417 & IS 2112) மற்றும் திருத்தங்கள், HUID பற்றி , ஆன்லைன் பதிவு, manak online இணையம் பற்றிய அறிமுகம் மற்றும் தொழில்நுட்ப விளக்கக்காட்சிகளையும் திரு T. ஜீவானந்தம் விளக்கினார் .

 

பங்கேற்பாளர்கள் BIS இன் விழிப்புணர்வு முயற்சியைப் பாராட்டினர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

***


(रिलीज़ आईडी: 1947528) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English