பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல்கள் பப்புவா நியூ கினியாவின் மோர்ஸ்பி துறைமுகத்திற்குச் சென்றடைந்தன

प्रविष्टि तिथि: 03 AUG 2023 2:22PM by PIB Chennai

பப்புவா நியூ கினியாவுடனான கடல்சார் கூட்டு செயல்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்களான சஹ்யாத்ரி மற்றும் கொல்கத்தா ஆகியவை ஆகஸ்ட் 2 அன்று போர்ட் மோர்ஸ்பிக்குச் சென்றன.

இந்த கப்பல்கள் அங்கு இருக்கும்போது இரண்டு கப்பல்களின் ஊழியர்களும் தொழில்முறை தொடர்புகள், கலாச்சார பரிமாற்றங்கள், யோகா அமர்வுகள் போன்றவற்றில் அந்நாட்டுக் கடற்படையினருடன் இணைந்து பங்கேற்பார்கள்.  இந்தியாவிற்கும் பப்புவா நியூ கினியாவிற்கும் இடையிலான கடல்சார் உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த துறைமுகக் கப்பல் அழைப்பு அந்நாட்டு அரசால் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி கேப்டன் ராஜன் கபூரால் வழிநடத்தப்படுகிறது. ஐ.என்.எஸ் கொல்கத்தா கப்பல், கேப்டன் ஷரத் சின்சுன்வால் தலைமையில் இயக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945363  

 

***


(रिलीज़ आईडी: 1945547) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu