சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை, மொட்டைக்காரன் சாவடி, அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி. சார்பில், செலவு குறைந்த கழிப்பறை குறித்த செயல்விளக்கம்

Posted On: 03 AUG 2023 1:14PM by PIB Chennai

சுகாதாரம் என்பது பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவையாக உள்ளது.  கிராமப்புற மற்றும் மக்களின் நகர்ப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை, தூய்மை இந்தியா இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் 800 திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. திறந்தவெளியில் கழிப்பிட முறையை ஒழித்து அனைவருக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு விரைவான முறையில் கழிவறைகள் கட்டுவது அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு, சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி விரைவான நிறுவலுக்காக மெல்லிய ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பிரிவு பேனல்களைக் கொண்ட செலவு குறைந்த மற்றும் நீடித்த கழிவறைகளை உருவாக்கியுள்ளது. இதன் மொத்த செலவு சுமார் ரூ.15,000/- ஆகும்.

சென்னை ரோட்டரி சங்கம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி.-யின் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுகிறது. இந்த சங்கம் பல்வேறு அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கில் செயல்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி சென்னையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் இந்த செலவு குறைந்த கழிவறை தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்து காட்டியுள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி நிறுவனம் சென்னை, மொட்டைக்காரன் சாவடியில் உள்ள அரசு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இரண்டு ப்ரீகாஸ்ட் சர்வீஸ் கோர் யூனிட்டுகளை நிறுவி இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர், மேற்கண்ட அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், 2023 ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப செயல்விளக்கத்தை ஏ.சி.டி.இ.எல்., தலைவர் டாக்டர் ஜெ.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

சி.எஸ்.ஐ.ஆர்., முதுநிலை விஞ்ஞானி டாக்டர் லட்சுமிகாந்தன், மாணவர்கள், பணியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், சென்னை ரோட்டரி சங்கத் தலைவர் கோபி ராமு உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945334

  

***


(Release ID: 1945502) Visitor Counter : 186
Read this release in: English