சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

2023 ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் 'இந்தியாவில் மின்னணு மற்றும் கணினிகளின் எதிர்காலம்' குறித்த கருத்தரங்கிற்கு பதிவு செய்ய சென்னை ஐ.ஐ.டி. அழைப்பு விடுத்துள்ளது

Posted On: 01 AUG 2023 1:35PM by PIB Chennai

சென்னை ஐ.ஐ.டி., (ஐ.ஐ.டி-எம்) பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை ஆகியவை  'ஆர்.ஐ.எஸ்.சி-பாதையின் மூலம் இந்தியாவில் மின்னணுவியலின் எதிர்காலத்தைவெளிப்படுத்தும் ஒரு நாள் நிகழ்வான 'டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி-V' கருத்தரங்கில் பங்கேற்க மாணவர்கள்தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.  தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் ஆகஸ்ட் 6 அன்று இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்தியாவில் வளர்ந்து வரும் ஆர்.ஐ.எஸ்.சி-சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய நுண்ணறிவைப் பெற இது ஒரு நல்ல தளமாகும். இது குறைந்த இருக்கைகளைக் கொண்ட நிகழ்வு. பதிவு மற்றும் பங்கேற்புக்குக் கட்டணம் இல்லை. கருத்தரங்கிற்கான பதிவு தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் - https://pravartak.org.in/dirv_tech_confluence_registration  

மத்திய அரசின் மின்னணுதகவல் தொழில்நுட்பம்திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்,  ஆர்.ஐ.எஸ்.சி-ஐ.எஸ்.ஏ-யை அடிப்படையாகக் கொண்ட  உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நுண்செயலியான 'சக்தி'யை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோர் இந்த நிகழ்வில் பிற முக்கிய பிரமுகர்களுடன் உரையாற்ற உள்ளனர்.

இந்த கருத்தரங்கில்  கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நுண்ணறிவு தொழில்நுட்ப சொற்பொழிவுகள்உள்நாட்டு ஆர்.ஐ.எஸ்.சி-செயலிகளை வெளிப்படுத்தும்  அரங்குகள்ஈர்ப்புமிக்க ஹேக்கத்தான் முடிவு மற்றும் சிறப்பு முதலீட்டாளர் அமர்வு ஆகியவை இடம்பெறும்.

***

ANU/AD/SMB/AG


(Release ID: 1944577) Visitor Counter : 116
Read this release in: English