சுரங்கங்கள் அமைச்சகம்
முக்கிய கனிமங்களை தங்கு தடையின்றி விநியோகிப்பதற்கான முயற்சிகள்
Posted On:
31 JUL 2023 4:19PM by PIB Chennai
கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மற்றும் கனிம ஆய்வு மற்றும் கன்சல்டன்சி லிமிடெட் ஆகிய மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்களிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. லித்தியம், கோபால்ட் போன்ற முக்கியமான கனிம சொத்துக்களை வெளிநாடுகளில் இருந்து கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலியில் உள்ள சில நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கனிமங்களை அந்த நாடுகளிலிருந்து நீண்ட காலத்திற்கு பெறுவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
முக்கிய கனிமத் துறையில் தன்னிறைவு பெறுவதற்காக இந்திய புவியியல் ஆய்வு (ஜி.எஸ்.ஐ) மற்றும் பிற ஆய்வு முகமைகள் மூலம் நாட்டில் அந்த கனிமங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதில் சுரங்க அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.
பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான கனிமங்களின் விரிவான பட்டியலை சுரங்க அமைச்சகம் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது.
முக்கியமான கனிமங்களின் தடையற்ற விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா உருவாக்கிய கனிம பாதுகாப்பு கூட்டமைப்பில் (எம்.எஸ்.பி) இந்தியாவும் உறுப்பினராகியுள்ளது. அமெரிக்காவைத் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நார்வே, கொரிய குடியரசு, சுவீடன், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இதன் பிற உறுப்பு நாடுகளாகும்.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
********
ANU/PLM/KPG
(Release ID: 1944445)
Visitor Counter : 110