திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டம் – 48 மாவட்டங்களில் 49 தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன

Posted On: 31 JUL 2023 4:01PM by PIB Chennai

திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனம் (ஜே.எஸ்.எஸ்), தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டம் (என்.ஏ.பி.எஸ்) மற்றும் கைவினைஞர்கள் பயிற்சி திட்டம் (சி.டி.எஸ்) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் நிறுவனங்களை ஏற்படுத்தி அதன் மூலம் திறன் மேம்பாடு, மறுதிறன் சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறது.

எல்லைப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 48 மாவட்டங்களில் 48 தொழிற்பயிற்சி நிலையங்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் நிறுவப்படுகிறது. இதில் சத்தீஸ்கரின் தண்டேவாடா, பஸ்தர், காங்கேர், சுர்குஜா, ராஜ்நந்த்கான், பிஜப்பூர், நாராயண்பூர், சுக்மா மற்றும் கோடாகான் ஆகிய 9 மாவட்டங்களும் அடங்கும்.

இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

********

ANU/PLM/KPG



(Release ID: 1944409) Visitor Counter : 87