குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வெளியிடப்பட்டன
Posted On:
31 JUL 2023 4:04PM by PIB Chennai
சுற்றுலாத்துறையில் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றஙகளுக்காக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்க்ரெடிபிள் இந்தியா வலைத்தளத்தில் பல மொழிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, மொபைல் பயன்பாடு, 360 டிகிரி மெய்நிகர் சுற்றுப்பயணம், utsav.gov.in வளைதளம் அறிமுகம் உள்ளிட்டவை அதில் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இதன் ஒரு படியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் (எம்.எஸ்.எம்.இ) சமீபத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக உதயம் தளத்தைத் தொடங்குவது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் தளங்களுடன் உதயம் தளத்தை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், 'உதயம் பதிவு' என்ற இணையதளம் மூலம் நிரந்தர பதிவை வழங்குவதன் மூலம், சுற்றுலாத் துறையில் எம்.எஸ்.எம்.இ.களுக்கு தடையற்ற மற்றும் ஆதரவான சூழலை உறுதி செய்து வணிகத்தை எளிதாக்க எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் உதவுகிறது. உதயம் பதிவுக்கான செயல்முறை முற்றிலும் இலவசம் மற்றும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. பதிவு செயல்முறை முடிந்ததும் க்யூஆர் கோடு கொண்ட சான்றிதழ்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு.பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்
***
ANU/CR/AG
(Release ID: 1944394)
Visitor Counter : 105