சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பசுமை விரைவுச் சாலைகளுக்கு இலக்கு
प्रविष्टि तिथि:
27 JUL 2023 3:35PM by PIB Chennai
கிரீன்ஃபீல்ட் எனப்படும் பசுமைத் திட்டங்களின் கீழ் சாலைகளை நிர்மாணிப்பதன் நோக்கம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகும். அதே நேரத்தில் போக்குவரத்து தேவைகளை மிகவும் திறமையான முறையில் பூர்த்தி செய்வது, முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையில் மிகவும் திறன் வாய்ந்த இணைப்பை வழங்குவது, பாதுகாப்பான சாலைகள் போன்றவையும் இதன் இலக்குகளாகும்.
நாட்டில் மொத்தம் 9860 கிலோ மீட்டர் நீளமுள்ள 27 பசுமை (கிரீன்ஃபீல்ட்) வழித்தடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. கிரீன்ஃபீல்ட் அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளைச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்கிறது.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(रिलीज़ आईडी: 1943268)
आगंतुक पटल : 163