சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பழைய வாகனங்களுக்கான . பாரத் (பிஎச்) தொடர் விதிகள்
प्रविष्टि तिथि:
27 JUL 2023 3:33PM by PIB Chennai
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 04 அக்டோபர் 2022 அன்று ஜி.எஸ்.ஆர் 762 (ஈ) வரைவு அறிவிப்பின் மூலம் பாரத் (பி.எச்) தொடர் பதிவு குறியீட்டை நிர்வகிக்கும் விதிகளை மேலும் திருத்துவதற்காக பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் / ஆலோசனைகளை வரவேற்றது, இதில் தற்போது தகுதியான நபர்களின் வழக்கமான பதிவு முத்திரையைக் கொண்ட வாகனங்களையும் பி.எச் சீரிஸ் பதிவு குறியீடாக மாற்றலாம். மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்க மாநில அரசுகள் மற்றும் சில தனி நபர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. பரிந்துரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அமைச்சகத்தில் பரிசீலிக்கப்பட்டன.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே ஜி.எஸ்.ஆர் 879 (இ) இறுதி அறிவிப்பை 14 டிசம்பர்2022 அன்று வெளியிட்டுள்ளது பாரத் (பி.எச்) தொடர் பதிவு குறியீட்டை நிர்வகிக்கும் விதிகளில் திருத்தங்களை அறிவித்துள்ளது.
இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
ANU/PKV/KPG
(रिलीज़ आईडी: 1943266)
आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English