புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தனி நபர் வருமானம் குறித்த தகவல்கள்

Posted On: 24 JUL 2023 3:36PM by PIB Chennai

மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்களின்படி, 2020-21 முதல் 2022-23 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய மற்றும் நிலையான (2011-12) விலைகளில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (என்.எஸ்.டி.பிஅடிப்படையில் அளவிடப்பட்ட மாநில / யூனியன் பிரதேச வாரியான தனிநபர் வருமானம் முறையே இணைப்பு-1 மற்றும் இணைப்பு-2 இல் கொடுக்கப்பட்டுள்ளதுமேற்குறிப்பிட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் வருமானம்தற்போதைய விலைகளில்அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அதிகரித்து வரும் போக்கைக் குறிக்கிறது.

மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏபொருளாதார நடவடிக்கைகள் / துறை வாரியாக தொகுக்கப்பட்டுள்ளதுஎனவேகடந்த 5 ஆண்டுகளில் முழு பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஜி.வி..வுக்கு அவற்றின் பங்களிப்புகள் இணைப்பு-3 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்திஅடிப்படை ஆண்டு 2011-12.

தமிழ்நாட்டில் 2020-21-ல் ரூ 2,12,174 ஆகவும், 2021-22-ல்  ரூ. 2,41,131 ஆகவும், 2022-23-ல்  ரூ. 2,73,288 ஆகவும் தனிநபர் வருமானம் இருந்தது.

இந்தக் கால கட்டத்தில் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி; ( அடிப்படை ஆண்டு 2011-12) முறையே தமிழ்நாட்டில் ரூ. 1,43,528, ரூ. 1,54,427, ரூ. 1,66,463 என இருந்தது.

இந்தத் தகவலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

************

 

ANU/PKV/KPG


(Release ID: 1942228) Visitor Counter : 1922


Read this release in: English , Urdu , Manipuri