சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸின் 60-வது பட்டமளிப்பு விழாவில் 2,573 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர்


சர்வதேச வளாகத்தை தொடங்கிய முதல் ஐஐடி என்ற வரலாற்றுச் சிறப்புடன், தான்சானியா-சான்சிபாரில் தனது வளாகத்தை ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது

Posted On: 22 JUL 2023 6:28PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழ (ஐஐடி மெட்ராஸ்) வளாகத்தில் இன்று (22 ஜூலை 2023) நடைபெற்ற 60-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவ-மாணவிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, 2,746 பட்டங்கள் (இணை மற்றும் இரட்டைப் பட்டங்கள் உள்பட) வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச வளாகத்தை தொடங்கிய முதல் ஐஐடி என்ற வரலாற்றுச் சிறப்புடன், தான்சானியா-சான்சிபாரில் தனது வளாகத்தை ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

பட்டமளிப்பு விழாவை பின்வரும் இணைப்பில் காணலாம் - https://www.youtube.com/watch?v=4dEOWRC97S0

பி.எச்டி (PhD), வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் வழங்கப்படும் இணை பிஎச்டி (Joint Degree PhD), இரட்டை பிஎச்டி (Dual Degree PhD) என 453 பிஎச்டி பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்திய தலைமை நீதிபதி மாண்புமிகு டாக்டர் தனஞ்சய ஒய்.சந்திரசூட் அவர்கள் இந்த நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக வருகை தந்தார். ஐஐடி மெட்ராஸ் நிர்வாகக் குழு தலைவர் டாக்டர் பவன் கோயங்கா அவர்கள் தலைமையில், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

பட்டங்கள் விவரம்

இந்த பட்டமளிப்பு விழாவில், 675 பேருக்கு பி.டெக் (36 பேர் ஹானர்ஸ்), 407 பேருக்கு பிடெக் மற்றும் எம்டெக் இரட்டைப் பட்டங்கள், 442 பேருக்கு எம்.டெக், 147 பேருக்கு எம்.எஸ்சி, 46 பேருக்கு எம்.ஏ., 49 பேருக்கு எக்சிகியூடிவ் எம்.பி.ஏ., 67 பேருக்கு எம்.பி.ஏ., 200 பேருக்கு எம்.எஸ்., 453 பேருக்கு பி.எச்.டி, 70 பேருக்கு தொழில்துறையினருக்கான ஆன்லைன் எம்.டெக்., என 2,573 பட்டதாரிகளுக்கு ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்கள் பட்டங்களை வழங்கினார். மேற்குறிப்பிட்ட பிஎச்டி பட்டங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் 19 இணைப் பட்டங்களும் அடங்கும்.

ஐஐடி மெட்ராஸ் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' ஆக அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் கிடைக்கப் பெற்ற சிறப்பு மானியத்தொகை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது.  செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் தொடங்கி சிஸ்டம்ஸ், சென்சிங், விஷன் என பல்வகைப் பிரிவுகளில் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஏராளமான ஆராய்ச்சி முயற்சிகளுக்கான ஆதரவை வழங்க உள்போட்டி செயல்முறையை இக்கல்வி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

காலையில் நடைபெற்ற முதன்மை பட்டமளிப்பு விழாவினைத் தொடர்ந்து, பட்டம் விநியோக நிகழ்ச்சிகள் (D3P) மொத்தமுள்ள 16 கல்வித் துறைகள் சார்பிலும் நடத்தப்பட்டு, பட்டதாரி மாணவர்களுக்கு அவரவர்களுக்கான பட்டங்கள் நேரில் வழங்கப்பட்டன.

The Top Medal Winners are

Sl

NO
NAME OF THE PRIZE NAME OF THE STUDENT
1

President of India Prize

For the highest CGPA amongst B.Tech and Dual Degree

Bharat Ratna M Visvesvaraya Memorial Prize

SAI GAUTHAM RAVIPATI

EE19B053

B.Tech (Electrical Engineering)

2

Sri V Srinivasan Memorial Prize

For the highest CGPA in Dual Degree

NEHA SWAMINATHAN

BE18B008

Dual Degree (B.Tech & M.Tech) Biological Engineering

3

Dr. Shankar Dayal Sharma Prize

For the best all round proficiency in curricular & extra- curricular activities in B.Tech

SHATAKSHI SARANGI

ME19B166

B.Tech Mechanical Engineering

4

Governor’s Prize

For the best all round proficiency in curricular & extra- curricular activities in Dual Degree

S PRAHALAD

BE18B036                  

Dual Degree (B.Tech & M.Tech) Biological Engineering


(Release ID: 1941740) Visitor Counter : 145


Read this release in: English