பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்களுக்கான ஸ்டார்ட் அப் திட்டம்
Posted On:
21 JUL 2023 2:23PM by PIB Chennai
'ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியை 16 ஜனவரி 2016 அன்று தொடங்கப்பட்டது. டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, 660 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 86,713 ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் டிபிஐஐடி எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அங்கீகரித்துள்ளது.
நாட்டில் ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் துறையில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
• பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக, சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் ஸ்டார்ட்அப்களுக்கான நிதித் திட்டத்தில் 10 சதவீத நிதி (ரூ.1000 கோடி) பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
• பெண் தொழில்முனைவோருக்கான தொழில் பாதுகாப்பகத் திட்டம் 20 பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
• ஸ்டார்ட்அப் இந்தியா இணையதளத்தில் பெண் தொழில்முனைவோருக்காக சிறப்பு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் இந்த பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
• பெண்களுக்காக விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
• பெண் தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் ஜனவரி 2020 இல் அசாமின் கவுகாத்தி மற்றும் நாகாலாந்தின் கோஹிமாவில் நடத்தப்பட்டது. இதில் 114 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.
• அரசு நடத்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு நிகழ்ச்சிகள் மூலமாகவும், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பெண் தொழில் முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதுள்ள திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இத்தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 1941482)
Visitor Counter : 191