குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
Posted On:
20 JUL 2023 5:32PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலம், மத்தியப் பிரதேச மாநிலம் உட்பட நாடு முழுவதும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பொதுப் பிரிவு பயனாளிகள் ஊரகப் பகுதிகளில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், நகர்ப்புறங்களில் 15 சதவீதமும் விளிம்புத் தொகை மானியத்தைப் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், வடகிழக்கு பிராந்தியம், முன்னோடி மாவட்டங்கள், மலை மற்றும் எல்லைப் பகுதிகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கு விளிம்புத் தொகை மானியம் கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 25% ஆகும். உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக ரூ.50 லட்சமும், சேவைத் துறையில் ரூ.20 லட்சமும் செலவாகும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு:
ஆண்டு
|
மத்தியப் பிரதேசத்தில்
|
குவாலியர் மாவட்டத்தில்
|
திட்டம்
|
மார்ஜின் பணம்
(ரூ. லட்சத்தில்)
|
மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு
|
திட்டம்
|
மார்ஜின் பணம்
(ரூ. லட்சத்தில்)
|
மதிப்பிடப்பட்ட
வேலை
|
2018-19
|
2526
|
10002.28
|
20208
|
62
|
322.38
|
496
|
2019-20
|
2175
|
8063.63
|
17400
|
36
|
176.73
|
288
|
2020-21
|
4854
|
13808
|
38832
|
99
|
411.7
|
792
|
2021-22
|
8082
|
20961.46
|
64656
|
250
|
854.35
|
2000
|
2022-23
|
5957
|
18129.7
|
47656
|
142
|
464.03
|
1136
|
2023-24 நிதியாண்டில் மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் குவாலியர் மாவட்டத்தில் பி.எம்.இ.ஜி.பியின் கீழ் புதிய திட்டங்கள் / அலகுகளை அமைப்பதற்கான இலக்குகள் பின்வருமாறு:
நிதியாண்டு
2023-24
|
மத்தியப் பிரதேசத்தில்
|
குவாலியர் மாவட்டத்தில்
|
திட்டம்
|
திட்டம்
|
இலக்குகள்
|
5528
|
97
|
இத்தகவலை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1941075)
IR/KPG/KRS
(Release ID: 1941238)
Visitor Counter : 140