சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
காஞ்சிபுரத்தில் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தில் தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
01 JUL 2023 6:25PM by PIB Chennai
காஞ்சிபுரம் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தில், தேசிய மருத்துவர்கள் தினம் இன்று (ஜூலை 1, 2023) கொண்டாடப்பட்டது. மரபியல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, மருத்துவ முகாம் மற்றும் மாநாட்டுடன் தொடங்கிய இந்த கொண்டாட்டம், அன்பு நிறைந்த மதிய விருந்துடன் நிறைவடைந்தது. இதில், சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் சுமார் 18 மருத்துவர்கள் கலந்து கொண்டு மக்கள் மருந்தக சிறப்பு அதிகாரியிடமிருந்து பாராட்டுக்களையும், கவுரவத்தையும் பெற்றனர்.
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆரோக்கியம் என்ற பரிசை வழங்குவதற்கு அயராது உழைக்கும் மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரதமரின் பாரதிய ஜன அவுஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி), நாட்டுக்கு தன்னலமின்றி, மனித குலத்தைக் காப்பாற்ற முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக மருத்துவர்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் மக்கள் மருந்தகத்தின் உயர்தர மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
FPSV.jpeg)
J2F7.jpeg)
***
AP/PKV/DL
(रिलीज़ आईडी: 1936731)
आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English