சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் நடத்திய 2023 தொழில்தினம் கருத்தரங்கம்
प्रविष्टि तिथि:
30 JUN 2023 5:23PM by PIB Chennai
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இன்று (2023 ஜூன் 30) தொழில்தினம் 2023 என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஐஐடி மற்றும் ஆற்றல் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கம், கார்பன் உமிழ்வை குறைக்கும் இந்தியப் பொருளாதாரத்தை நோக்கிய பாதை என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது.
இதில் ஆற்றல் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இன்ஃபோசிஸ், ஆதித்யா பிர்லா, கம்மின்ஸ், சேவ்ரான் டெக் வென்சர்ஸ், ஷெல், பக்கர் ஹக்ஸ், எஃப்எல்எஸ் மிட்த் ஆகிய 7 நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்தக் கருத்தரங்கில் ஆற்றல் திறன், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கை ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் சென்னை ஐஐடி பேராசிரியர் சத்யநாராயண சேஷாத்ரி, ஆற்றல் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நிகில் தம்பே உள்ளி்ட்ட பலர் உரையாற்றினர்.
2030-ம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

***
AP/ES/AG/KRS
(रिलीज़ आईडी: 1936523)
आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English