சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சில்லறை வணிக மையங்களுக்கான முகவர் தேர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUN 2023 3:23PM by PIB Chennai

முன்னணி பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களான (OMCs) BPCL, HPCL, மற்றும் IOCL ஆகிய நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய சில்லறை விற்பனை நிலையங்களை நிறுவுவதற்கான விளம்பரங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றன. நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஏற்ப அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் சந்தைத் தேவையை பூர்த்தி செய்வதே இந்த விளம்பரங்களின் நோக்கமாகும்.

 

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் தேவைக்கான சந்தை பெருகி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியை சந்தித்து எட்டியுள்ள நிலையில், எரிசக்தி தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இந்த அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய OMC நிறுவனங்கள் தங்கள் சில்லறை விற்பனை நிலைய வலையமைப்பை விரிவுபடுத்துகின்றன. இந்த விரிவாக்கத்தில் நகர்ப்புறப் பகுதிகள், வரவிருக்கும் நெடுங்சாலைகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், ஊரகப் பகுதிகள், குக்கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் ஆகியவை பயனடையவுள்ளன.

 

இந்த விரிவாக்கத்தின் மூலம் தரமான பெட்ரோலியப் பொருட்களை வழங்கிட உறுதி செய்வதுடன், ஊரகப் பகுதிகளில் உள்ள வேளாண் தொழில்களுக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்களை வழங்கிடவும், குக்கிராமப் பகுதிகளுக்கு எரிபொருள் தேவையைப் பூர்த்திச் செய்யவும் தயார் நிலையில் வைக்கப்படும்.

 

விரிவாக்கப்படும் இந்த எண்ணெய் நிறுவனங்களின் வலையமைப்பு வளர்ந்து வரும் எண்ணெய் தேவையைப் பூர்த்திச் செய்வதோடு மட்டுமல்லாது, நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தரவுள்ளது. எண்ணெய் சில்லறை வணிகத் தொழில் முனைவோர்கள் இந்த அற்புதமான வாய்ப்புகளை வழங்கும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த வளர்வதற்கான ஒரு பலமான வணிகப் பாதையை அமைத்துக்கொள்ளலாம். மேலும் சில்லறை வணிக முகவர் துறையில் வெற்றிகரமாக சாதிக்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, நிலம் பற்றாக்குறையாகவும், விலை உயர்ந்ததாகவும் மாறியுள்ளது. ஆகையால் முன்னணி பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் (OMC நிறுவனங்கள்) முகவர் வாய்ப்புகளை மாற்றுத் தொழில் வாய்ப்பாக நில உரிமையாளர்களுக்கு புதிய தொழில் வளப்பாதையை திறந்துள்ளன.

கடந்த காலங்களில் முன்னணி பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களின் (OMCs) சில்லறை விற்பனை (பெட்ரோல் பங்க்குகள்) நிலையங்களுக்கான கடைசி விளம்பரத்தை 2018 ஆம் ஆண்டு வெளியிட்டது.

 

இந்த முகவர் தேர்வு செயல்முறைக்காக, எளிதாக வணிகம் செய்வதற்கான அரசின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, OMC நிறுவனங்கள் புதிய, எளிதாகக் கையாளும் (user-friendly) இணைய வழி விண்ணப்பங்கள் மற்றும் எளிதாக்கப்பட்ட விண்ணப்பப் படிவமாக அறிமுகம் செய்துள்ளது.

 

விளம்பரப்படுத்தப்பட்ட பகுதிகளில்/நிலையான, பொருத்தமான நிலம் கிடைப்பது மிகவும் முக்கியம் என்றாலும், SC/ST இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆரம்பத்தில் நிலம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். ஆனால், முகவராகத் தேர்வு செய்யப்படும் போது நிலம் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தேர்வு செயல்முறையானது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தனிப்பட்ட முகவரால் நடத்தப்படும். அதில், கணினிமயமாக்கப்பட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியிருக்கும் அல்லது ஏலத் திறப்பு ஆகியவை உட்பட்டிருக்கும்.

 

அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திர செயலாற்றல்கள் கொண்டிருக்கும். சில்லறை விற்பனை நிலையங்களின் முகவர் ஒப்பந்தத்தால் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் இணையும் தொழில்முனைவோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகின்றது.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1935881) வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க: English