சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வருமானவரிப் பிடித்தம் (TDS )விழிப்புணர்வு காணொலிக் கருத்தரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2023 4:31PM by PIB Chennai

வருமானவரி ஆணையரகம் (TDS ) சென்னை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி, வரிப்பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்தினர்.

 

இந்த கருத்தரங்கில் திரு ராஜா, நிதி ஆலோசகர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் தொடக்கவுரை வழங்கி சிறப்பித்தார்.

 

வருமான வரி அலுவலர்கள் ராஜாராமன் மற்றும் T V ஸ்ரீதர் ஆகியோர் வருமான வரிப்பிடித்தம் செய்வதன் அவசியம், மற்றும் அதன் தொடர்பான விதிகளின் சாராம்சத்தை எளிமையாக விளக்கினார்.

 

வருமானவரி வரிப்பிடித்தம் செய்யும் நபர்களின் தலையாயக் கடமைகளான, TAN ஐ விண்ணப்பித்தது பெறுதல், வருமான வரிச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள செலவுகளை செய்யும் பொழுது சரியான விகிதத்தில் வரிப்பிடித்தம் செய்தல், வரிப்பிடித்தம் செய்த தொகையை காலக்கெடுக்குள் மத்திய அரசின் கணக்கில் செலுத்துதல், TDS காலாண்டு படிவங்களை காலத்தே தாக்கல் செய்தல், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எளிமையான வகையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திவ்யா ரங்கமணி , வருமானவரி TDS காலாண்டு படிவங்களை எப்படி தாக்கல் செய்வது என்பதனை விரிவாக விளக்கினார்.

 

வருமானவரித் துறை சார்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட, வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களுக்கான கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களின் SOFT COPY பகிரப்பட்டது. மேலும், வருமானவரித் துறையின் அதிகாரபூர்வ YOU TUBE CHANNEL ல், ETDS தொடர்பான பல்வேறு வகையான காணொலிகள், வருமானவரிப் பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், பெருநகர சென்னை மாநகராட்சியைச் சார்ந்த 130க்கும் மேற்பட்ட வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1934773) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English