சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது
ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது
Posted On:
21 JUN 2023 5:51PM by PIB Chennai
பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 2023, ஜூன் 19 முதல் 21 வரை மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் ஜி20 உறுப்பு நாடுகள், 11 விருந்தினர் நாடுகள், உலக வங்கி உள்ளிட்ட 15 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த 3 நாள் கூட்டத்தில் பருவ நிலை மாற்றத்திற்கு உரிய நேரத்தில் போதுமான அளவு நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான வழிமுறைகள், நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளுக்கான நிதியைப் பெறுதல், நீடிக்கவல்ல வளர்ச்சியை நோக்கிய நிதிக்கான சூழலின் திறன் கட்டமைப்பு பற்றி உறுப்பினர்கள் ஆழமாக விவாதித்தனர்.
இந்தக் கூட்டத்தின் பரிந்துரைகள் கலவையான நிதி நடைமுறைகளில் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டுமென்று பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பருவநிலை மாற்றத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த கொள்கை சூழலை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை திறமையோடு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சீரான கொள்கை வடிவமைப்பு மற்றும் மாறுதலுக்குரிய அம்சங்களில் சர்வதேச ஒத்துழைப்பு பெருமளவு உதவும் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
நீடிப்புத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் காணுதல், புரிந்து கொள்ளுதல். நிர்வகித்தலுக்கு பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், எம்எஸ்எம்இ-க்கள் உள்ளிட்டவற்றில் இந்தப் பிரச்சனைகளை குறைப்பதற்கு தயாராவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
பருவநிலை முதலீடுகள் மற்றும் தனியார் துறை நிதியை அதிகப்படுத்துவதற்கு தேவையான தரவுகள் மற்றும் அளவுகளின் புரிதல் மேம்படுத்தப்பட வேண்டும். தரவுகள் எளிதாக கிடைப்பதை மேம்படுத்த அரசுகள். சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையிடையே ஒத்துழைப்புக்குப் பாடுபட வேண்டுமென்று இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தையொட்டி ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு பற்றிய விவாதங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மக்களை மையப்படுத்தியதாகவும் இருப்பதற்கு மக்கள் பங்கேற்பு நிகழ்வுகள் பலவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள மகாபலிபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஜி20 நிதிப்பணிக்குழுவின் பிரதிநிதிகளும், தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

***
SM/SMB/RR/KRS
(Release ID: 1934189)