சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மகாபலிபுரம் @கடற்கரை கோயிலில் நடைபெறும் சர்வதேச யோகா தினம்-2023-ல், ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக் குழுவுடன் சென்னையிலுள்ள சித்தா நிறுவனம் இணைகிறது
Posted On:
20 JUN 2023 1:19PM by PIB Chennai
2014 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நாளினைக் கொண்டாடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் (https://ayush.gov.in) முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான யோகா நிகழ்ச்சிகளுடன் சர்வதேச யோகா தினத்தை தேசிய சித்தா நிறுவனம் கொண்டாடுகிறது.
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற விருப்பத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில், “வசுதைவ குடும்பகத்திற்கான யோகா” என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக உள்ளது. இந்த ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெறும் நாட்டின் சர்வதேச யோகா தினம் 2023 கொண்டாட்டங்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் தலைமை தாங்குவார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது போல், தேசிய சித்தா நிறுவனத்தின் வளாகத்தில் பெருந்திரள் யோகா நிகழ்ச்சி நடைபெறும். மேலும் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 21.06.2023 அன்று காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக் குழு”வுக்கான யோகா அமர்வை தேசிய சித்தா நிறுவனம் நடத்துகிறது.
***
SM/SMB/RJ/KRS
(Release ID: 1933716)
Visitor Counter : 86