சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியைராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்)நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUN 2023 3:44PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது பொருள்களுக்கான தயாரிப்பு தர சான்றிதழ் (ISI மார்க்), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கலைப்பொருட்களுக்கான ஹால் மார்க்கிங் சான்றிதழ் மற்றும் ஆய்வக சேவை போன்ற பல்வேறு திட்டங்களை, தொழில்துறையின் நலனுக்காகவும் அதையொட்டி நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகவும் கொண்டு செயல்படுத்துகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம், ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தின் மாவட்ட அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 20 ஜூன் 2023 இன்று காலை 10:00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்தது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி .எஸ்.வளர்மதி ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பிஐஎஸ் சார்பாக, திருமதி. ஜி.பவானி, பிஐஎஸின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இ-பிஐஎஸ் மற்றும் பிஐஎஸ் கேர் செயலி உள்ளிட்ட பிஐஎஸ்ஸின் சமீபத்திய வளர்ச்சிகள் பற்றியும் அவர் கூட்டத்தில் விளக்கினார். திரு. தினேஷ் ராஜகோபாலன், BIS தொழில்நுட்ப விளக்கங்களை கையாண்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட அரசு அலுவலர்கள் , நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

     

 

     

***


(வெளியீட்டு அடையாள எண்: 1933649) வருகையாளர் எண்ணிக்கை : 99
இந்த வெளியீட்டை படிக்க: English