சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக ‘மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான யோகா’ நிகழ்வுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசியக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
19 JUN 2023 8:01PM by PIB Chennai
யோகா பற்றி உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய இணையவழிக் கருத்தரங்கிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசியக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ‘மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான யோகா’ என்ற இந்தக் கருத்தரங்கு சென்னையையடுத்த முட்டுக்காடில் உள்ள இந்தக் கல்வி நிறுவன வளாகத்தில் 2023, ஜூன் 20 அன்று காலை 11 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெறும்.
இந்தக் கருத்தரங்கில் https://youtube.com/live/buiE3uzD-D4?feature=share என்ற யூடியுப் இணைப்பு மூலம் 2000-க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான யோகாவை வடிவமைத்து நடத்தி வருவதாக இந்தக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிசிகேத ரௌத் தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய யோகா விழா 2023 ஜூன் 21 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வின் போது, பர்வதாசனா, யோகமுத்ராசனா, ஜானுசிராசனா, வஜ்ராசனா, பாலாசனா, சேதுபங்தாசனா, புஜங்காசனா, தனுராசனா, அர்தஷலபாசனா, பாதஹஸ்தாசனா, திரிகோணாசனா போன்ற யோகாசனங்கள் இடம்பெறும்.
***
SM/SMB/RJ/KRS
(रिलीज़ आईडी: 1933492)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English