சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், நிலையான நிதி செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் தொடங்குகிறது

Posted On: 18 JUN 2023 6:55PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் ஜூன் 19 முதல் 21, 2023 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

 

நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் இரண்டு கூட்டங்கள் முறையே கவுகாத்தி மற்றும் உதய்பூரில் நடைபெற்றன. 3வது சந்திப்பின் போது, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம்​​, 2023 பணித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழங்கல்களுக்கான பரிந்துரைகளை இறுதிசெய்வதற்கான விவாதங்களை வழிநடத்துவதில் கவனம் செலுத்தும்.

 

நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டமானது ஜி 20 நிலையான நிதி திட்ட வரைபடத்தில் திட்டமிடப்பட்டுள்ள செயல்களை முன்னெடுப்பதற்கு மூன்று முன்னுரிமைப் பகுதிகளில் வேலை செய்து வருகிறது, அதாவது

(i) பருவநிலை நிதிக்கான சரியான நேரத்தில் போதுமான ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வழிமுறைகள்;

(ii) நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துதல்;

(iii) நிலையான வளர்ச்சியை நோக்கி நிதியளிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்பின் திறனைக் கட்டியெழுப்புதல்.

 

முதலில், நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பருவநிலை முதலீடுகள் மற்றும் மாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களின் பட்டியலை நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் உருவாக்கும். பேரிடர் பகிர்வு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள், பசுமை  மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான தனியார் மூலதனத்தை ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் நிதிக் கருவிகள் ஆகியவை இந்த விருப்பங்களில் அடங்கும். பருவநிலை நிதியை அளப்பதில் உள்ள முக்கிய சவால்கள், சலுகை நிதியின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு, இடர் நீக்க வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வங்கித் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவையும் இதில் அடங்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து அதனைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆரம்பநிலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு அதிக மூலதனத்தை  செயல்படுத்துவதும் ஒரு சவாலாகவே உள்ளது.

 

நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் பருவநிலையோடு கூடுதலாக நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) நிதியளிக்கும் பணியை மேற்கொண்டது இதுவே முதல் முறை. இந்த முன்னுரிமையின் கீழ், சமூகத்திற்கான தாக்கம் ஏற்படுத்தும் கருவிகளுக்கான முதலீடு, இயற்கை தொடர்பான தரவு மற்றும் அறிக்கை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. முறைசார் கருவிகள், தனித்தனியான அளவீடு, அறிக்கையிடல் கட்டமைப்புகள் இல்லாதது சமூக தாக்க முதலீட்டு வளர்ச்சியைத் தடுக்கிறது. இதேபோல், இயற்கை தொடர்பான தரவு மற்றும் அறிக்கையிடல் ஆகியவை தரவு மற்றும் அளவீடுகளுக்கான அணுகல் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க தரவு ஆய்வாளர்கள் மற்றும் கொள்கைகளை வாங்குபவர்களுக்கு இடையே இடைவெளிகள் உள்ளன. நிதி ஓட்டங்களுக்கான சூழலை செயல்படுத்துவதற்கு இந்த இரண்டு கூறுகளும் அவசியம்.

 

முறைசார் கருவிகள், தனித்த அளவீடு மற்றும் அறிக்கையிடல் கட்டமைப்புகள் இல்லாதது சமூக தாக்க முதலீட்டு வளர்ச்சியைத் தடுக்கிறது. இதேபோல், இயற்கை தொடர்பான தரவு மற்றும் அறிக்கையிடல் ஆகியவை வரையறுக்கப்பட்ட தன்மை, தரவு மற்றும் அளவீடுகளுக்கான அணுகல் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க தரவு ஆய்வாளர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுக்கு இடையே இடைவெளிகள் உள்ளன. நிதி ஓட்டங்களுக்கான சூழலை செயல்படுத்துவதற்கு இந்த இரண்டு கூறுகளும் அவசியம்.

 

நிலையான வளர்ச்சி மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்திற்கான 2030 நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை ஆதரிப்பதில் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நிலையான நிதிக்கான திறன் மேம்பாட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், கணிசமான அறிவு இடைவெளிகள், வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப உதவி, நிலையான நிதி பற்றாக்குறை மற்றும் திறன்-வளர்ப்பு, திட்டங்களை வழங்குவோருக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமை ஆகிய சிக்கல்கள் உள்ளன.

 

இதைக் கருத்தில் கொண்டு, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம், இந்திய தலைமையின் கீழ், 2023 ஆம் ஆண்டிற்கான அதன் வழங்கல்களின் ஒரு பகுதியாக, சவால்களை எதிர்கொள்ளவும், முழு நிலையான நிதி சுற்றுச்சூழல் அமைப்புக்கும் பயனளிக்கவும் தன்னார்வ பரிந்துரைகளின் தொகுப்பை உருவாக்கி வருகிறது. வரைவு தன்னார்வப் பரிந்துரைகள் மீது இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஜூலை 2023 இல் 3வது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களுக்கு ஊட்டமாக இருக்கும்.

 

கூட்டத்தின் பக்க நிகழ்வாக, பின்வரும் இரண்டு கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்:

 

(i) பசுமை மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி மற்றும் வரிசைப்படுத்தலை ஊக்குவிக்கும் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிதிக் கருவிகள் பற்றிய ஜி 20 கூட்டம்.

 

(ii) ஜி 20  நிதி, தரவு மற்றும் பருவநிலை சீரமைக்கப்பட்ட அளவீடுகள், முதலீடுகள் மற்றும் நிலைத்தன்மை தரவு சிக்கல்கள் பற்றிய கூட்டம் .

 

இரண்டு கூட்டங்களும், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சிவில் சமூகத்திலிருந்து பல உயர்மட்ட பேச்சாளர்களிடமிருந்து அறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள உதவும். பல்வேறு தலைப்புகளில் நுண்ணறிவுகளை இவை வழங்குகின்றன. நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் பக்க நிகழ்வாக சென்னையில் பல மக்கள் பங்கேற்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் பங்கேற்பு நிகழ்வுகளில் ரிசர்வ் வங்கிப் (RBI) பணியாளர் கல்லூரியில் 'நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான இந்தியாவின் ஜி 20 திட்ட வரைபடம் குறித்த உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்வு மற்றும் 17 ஜூன் 2023 அன்று ஐஐடி மெட்ராஸில் தணிப்பு மற்றும் தகவமைப்புக்காக இந்தியாவில் பருவநிலை நிதியைத் திரட்டுவதற்கான வட்டமேசை நிகழ்வு ஆகியவை அடங்கும். தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் என பலர் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர். நிகழ்வுகள்  கலந்துரையாடலாகவும் மற்றும் விரிவான பருவநிலை மற்றும் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு வெற்றிகரமாக எடுத்துக் கூறின.

 

மாமல்லபுரத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்த உள்ளூர் உல்லாசப் பயணங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில் யோகா அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

AD/CJL/DL


(Release ID: 1933306) Visitor Counter : 198
Read this release in: English