சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்: வாழ்க்கையை மாற்றுதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல்
கடந்த 9 ஆண்டுகளில் கிராமப்புறப் பகுதிகளில்
3 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன
Posted On:
14 JUN 2023 5:30PM by PIB Chennai
வீட்டுவசதி என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களின் அடிப்படைத் தேவையாகும். கிராமப்புற வீட்டுவசதிப் பற்றாக்குறையை தீர்ப்பதும், குறிப்பாக ஏழைகளுக்கு தரமான வீட்டுவசதியை மேம்படுத்துவதும் அரசின் வறுமை ஒழிப்பு உத்தியின் ஒரு முக்கியமான அம்சமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ் மத்திய அரசு கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற அவர்களுக்கு உறுதியான வீடுகளைக் கட்டி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 75 சதவீதம் எஸ்சி எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சொந்தமானதாகும். மேலும் 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும். இந்த நடைமுறை பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும், வீடுகளில் நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்குள்ள பங்கை வலுப்படுத்துவதிலும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
கட்டப்பட்ட வீடுகள் : கிராமப்புறங்களில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள்
உரிமை : பிரதமர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 70 சதவீதத்திற்கும் மேல் பெண்களுக்கு சொந்தமானதாகும்.
சமூகப் பிரிவு : 4-ல் 3 வீடுகள் எஸ்டி/எஸ்சி/சிறுபான்மையினருக்கு சொந்தமாகும்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் கழிவறை, மின்சாரம், குழாய் மூலம் குடிநீர், தூய்மையான திறன் மிக்க சமையல் எரிபொருள் (எல்பிஜி) போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. மக்கள் தங்களது சொந்த வீடுகளை கட்டுவதில் தீவிரமாக பங்கேற்கும்போது இந்த வசதிகளை அவர்கள் பெறும்போது, அவர்களது வீடுகள் மீது ஒரு வலுவான தொடர்பு இருப்பதை உணர்வதுடன் தாங்கள் வசிக்கும் இடத்தின் மீது உண்மையான வாஞ்சை ஏற்படும்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது கண்கூடாகும். வீடுகளை முடிக்கும் வேகத்தை அதிகரித்தல், சரியான நேரத்தில் ஒதுக்கீடுகளை வழங்குதல், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கண்காணித்தல், அடிக்கடி ஆய்வு செய்தல், உரிய நேரத்தில் நிதியை விடுவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். கிராமப்புற கொத்தனார்களுக்கு பயிற்சி அளித்து தரமான கட்டுமானத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
AD/PKV/RR/GK
(Release ID: 1932351)
Visitor Counter : 118