சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 125% வளர்ச்சி அடைந்துள்ளது. பிஎல்ஐ திட்டங்களின் கீழ் முதலீடு ரூ 21,861 கோடி பெறப்பட்டுள்ளது

Posted On: 13 JUN 2023 1:59PM by PIB Chennai

கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியாவின் மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி  125 சதவீதம் அதிகரித்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  2013-14ல் ரூ. 90,415 கோடியாக இருந்த ஏற்றுமதி, 2022-23ல் ரூ. 2,04,110 கோடியாக அதிகரித்துள்ளது.  இந்தியாவிலிருந்து செய்யப்படும் மொத்த ஏற்றுமதியில் 5.71 சதவீதம் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியாகும். மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகிய 5 முக்கிய நாடுகள் உள்பட சுமார் 200 நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியில் 60 சதவீதம் இந்தியாவில் செய்யப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பு நாடாக உள்ளது. உலகிலேயே குறைந்த விலை தடுப்பூசிகளை அதிக அளவில் வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், மேலும் உலக அளவில் பொது மருந்துகளை அதிகம் வழங்கும் நாடாகவும் திகழ்கிறது. உலகளாவிய விநியோகத்தில் 20% பங்கை இந்தியா பெற்றுள்ளது.  மேலும், இந்தியா நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் மைத்ரி முன்முயற்சியின் கீழ் (மே 19, 2023 வரை) உலகம் முழுவதும் உள்ள சுமார் 100 நாடுகளுக்கு 298 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

தன்னம்பிக்கையை அடைவதற்கும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், துறையில் பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும்,  மொத்த மருந்துகள் , மருத்துவ சாதனங்கள்  மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகிய மூன்று உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு  திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 மார்ச் மாதம் வரை, மொத்தம் ரூ 21,861 கோடி  பிஎல்ஐ மூலம் முதலீடு பெறப்பட்டுள்ளது.


                                ***

AD/PKV/GK


(Release ID: 1932058) Visitor Counter : 331
Read this release in: English