சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிரமோஸ் ஏவுகணையின் ‘வெள்ளிவிழா ஆண்டு’ கொண்டாட்டங்கள் கோலாகலமாக நிறைவடைந்தன

प्रविष्टि तिथि: 12 JUN 2023 6:19PM by PIB Chennai

இந்தியா- ரஷ்யாவின் கூட்டு முயற்சியான பிரமோஸ் ஏவுகணையின் ‘வெள்ளிவிழா ஆண்டு’ கொண்டாட்டங்கள் இன்று  (2023, ஜூன் 12) கோலாகலமாக நிறைவடைந்தன. இந்தக் கொண்டாட்டங்களுக்கு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பத்ம பூஷன் டாக்டர் ஏ எஸ் பிள்ளை முன்னிலை வகித்தார். பாதுகாப்புத் துறையின் கூட்டு முயற்சியை மகத்தான உச்சங்களுக்குக்  கொண்டுசெல்லும் வகையில் பிரமோஸ் திட்டத்தின் குழுவிற்கு இவரது அறிவார்ந்த உரை ஊக்கமளிப்பதாக இருந்தது.

 பிரமோஸ் திட்ட தலைமை இயக்குநர் திரு அதுல் திங்கர் ரானே, துணைத்தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சஞ்சீவ் கே ஜோஷி, சந்தை ஊக்குவிப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவு இயக்குநர் திரு பிரவீன் பதக் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், பிரமோஸ் திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய டாக்டர் ஏ.சிவதாணுப் பிள்ளை, பிரமோஸ் திட்டத்தின் மூலம் சூப்பர் சானிக் ஏவுகணையைக் கொண்டுள்ள முதலாவது நாடு இந்தியா என்பதை உலகத்திற்கு  நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தவகையில் ஐந்தாவது நாடு என்ற கருத்து உடைக்கப்பட்டிருப்பதாக ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு  திட்டத்தில் இந்தியா-ரஷ்யா இடையே முக்கியமான பங்களிப்பு செய்தவரும், பிரமோஸ் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவரும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்பட்டவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் ஒருமுறை கூறியதாக டாக்டர் ஏ.சிவதாணுப் பிள்ளை தெரிவித்தார்.

ஏற்கனவே பல மைல்கல்களை எட்டியிருந்த நிலையில், 1998-ம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று கூட்டுமுயற்சித் திட்டம் தொடங்கப்பட்டு 2001, ஜூன் 12 அன்று முதலாவது பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது வரை இந்தத் திட்டம் முற்றிலும் தனித்தன்மையானது என்பது  நிறுவப்பட்டதாக டாக்டர் பிள்ளை கூறினார்.

“எந்த சவாலையும் நாம் ஏற்றுக்கொண்டோம்... எந்த சவாலையும் ஒருபோதும் ‘முடியாது’ என நாம் கூறியதில்லை”  என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய புவிசார் அரசியல் பதற்றநிலை பற்றிக்  குறிப்பிட்ட டாக்டர் பிள்ளை பிரமோஸ் ஏவுகணையை 21-ம் நூற்றாண்டின் ‘பிரம்மாஸ்திரம்’ என சமப்படுத்தி வர்ணித்தார். “ஜனநாயகத்தில் பலம் வாய்ந்த நாடு மட்டுமே சமாதானத்தை முன்னெடுக்க முடியும். பிரமோஸ் போன்ற சக்திவாய்ந்த ஆயுதம் தான் உலகில் சமாதானத்தை முன்னெடுக்க இந்தியாவுக்கு பலத்தை அளித்தது” என்று அவர் கூறினார்.

“கூட்டு முயற்சி திட்டத்தை முன்னின்று தலைமை தாங்கும் தொலைநோக்குப் பார்வையை டாக்டர் பிள்ளை கொண்டிருந்தார். சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர்” என்று பிரமோஸ் திட்டத்தின் தலைவர் திரு அதுல் டி ரானே தமது உரையில் குறிப்பிட்டார்.

பிரமோஸ் இன்று தூணாக நிற்கிறது என்றால் டாக்டர் பிள்ளை தான் அந்த தூணாக இருக்கிறார் என்று திரு ரானே கூறினார்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் போது பிரம்மோஸ் கலையரங்கை டாக்டர் பிள்ளை தொடங்கிவைத்தார். டாக்டர் ஏ சிவதாணுப் பிள்ளை கலையரங்கு என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கலையரங்கு அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலையரங்கில் நிறுவனர்களின் மாடத்தில் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற முறையில் அவரது நீண்டகால சிறப்புமிக்க பணிக்காலத்தில் பெற்ற பல விருதுகள், பட்டயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்தவிழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஷிரிங்கலா குழுவைச் சேர்ந்த கலைஞர்களின் சிந்தை கவரும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்த்தது.

ஐதராபாத், நாக்பூர், பிலானி ஆகிய இடங்களில் உள்ள பிரமோஸ் பணி மையங்களிலும் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்த விழாக்களில் திரு அதுல் டி ரானே காணொலி காட்சி மூலம் ஊழியர்களிடையே உரையாற்றினார்.

***


(रिलीज़ आईडी: 1931789) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English