சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கைவினை ஆசிரியர் பயிற்சி அமர்வு 2023-24-க்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு

Posted On: 08 JUN 2023 4:37PM by PIB Chennai

2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை ஓராண்டு கால கைவினை ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் நடைபெறும் வகுப்புகளில் சேர அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நுழைவுத் தேர்வு 08.07.2023 அன்று நடைபெற உள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 01.06.2023 முதல் 17.06.2023 வரை www.nimionlineadmission.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: என்டிசி/என்ஏசி (பொருத்தமான பிரிவில் என்சிவிடி சான்றிதழ்) அல்லது டிப்ளமோ/அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி வாரியம்/பல்கலைக்கழகம் அல்லது அதற்கு ஈடான நிறுவனத்தில் பெறப்பட்ட பட்டம்.

எஸ்சிவிடி விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள், அதே சமயம் சிஓஇ விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தாது.

நுழைவுத் தகுதி தேர்வில் கலந்து கொள்பவர்கள் சிஐடிஎஸ் சேர்க்கைக்கு கலந்து கொள்ள முடியாது.

நுழைவுத் தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி/எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு ரூ.300.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் விதம்: விண்ணப்பக் கட்டணத்தை, நெட் பேங்கிங்/கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம்.

இடஒதுக்கீடு: மத்திய அரசு இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி.

கட்டண விகிதம்:

பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மாதம் ரூ.150. எஸ்சி/எஸ்.டி, பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவினருக்கு ரூ.50.

ஆண், பெண் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.100 வீதம் அளவான விடுதி வசதி

பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

  • கைவினை ஆசிரியர்களுக்கான பிரத்யேக வகுப்பு. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு ஐடிஐ, தனியார் ஐடிஐ-கள், ஐடிஓடிஎஸ்-களில் ஆசிரியர்களாக பணியாற்றலாம்.
  • தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் செயல்திறன் மிக்க பயிற்சி.
  • டிரேடு தியரி, பிராக்டிகல், டிராயிங், கால்குலேஷன் ஆகிய தலைப்புகளில் பாடங்கள். ஆசிரியர்களுக்கான சிறப்பு வகுப்புகளும் உள்ளன.
  • வெற்றிகரமான பயிற்சி நிறைவுக்குப் பின்னர் 100% வேலைவாய்ப்பு.

சென்னை தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் (என்எஸ்டிஐ) தச்சர், கணினி மென்பொருள் செயலி, சிவில் டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், பிட்டர் மெக்கானிக், டீசல் மோட்டார் மெக்கானிக், பிளம்பர், தையல் தொழில்நுட்பம், டூல் மற்றும் டை மேக்கர், வெல்டர் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஆடவர் மற்றும் மகளிர் இதில் சேரலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதி.

திருச்சி என்எஸ்டிஐ-ல் பேஷன் டிசைன் தொழில்நுட்ப வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விடுதி வசதி இல்லை.

புதுச்சேரி என்எஸ்டிஐ விரிவு மையத்தில் கணினி மென்பொருள் அப்ளிகேஷன் பயிற்சி அளிக்கப்படும். இதில் இருபாலரும் பயிலலாம். விடுதி வசதி இல்லை.

சென்னை, திருச்சி, புதுச்சேரி என்எஸ்டிஐ தவிர, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு என்எஸ்டிஐ-க்கள், தனியார் ஐடிஓடி-க்களும் இத்தகைய திறன் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உரிய சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: 9444536624, 8144879949 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்கவும், இதர விவரங்களுக்கும் www.nimionlineadmission.in என்ற இணையதளத்தை அணுகவும்.

***

AD/PKV/RR/GK



(Release ID: 1930833) Visitor Counter : 260


Read this release in: English