மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
உலக பால் தினம் மற்றும் கோடைக்கால சந்திப்பைக் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கொண்டாடியது
प्रविष्टि तिथि:
01 JUN 2023 6:47PM by PIB Chennai
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஜம்மு காஷ்மீர் அரசு வேளாண் உற்பத்தித் துறையுடன் இணைந்து உலக பால் தினத்தை ஸ்ரீநகரில் இன்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இரண்டு நாள் கோடைக்கால சந்திப்புக் கூட்டமும் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பர்ஷோத்தம் ரூபாலா இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பாலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் அவர் தொடங்கிவைத்தார். பால் உற்பத்திக் குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929130
----
AD/IR/KPG/GK
(रिलीज़ आईडी: 1929180)
आगंतुक पटल : 173