சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய நிர்ணய அமைவனத்தின் இயக்குநர் ஜெனரல், ஸ்ரீ பிரமோத் குமார் திவாரி, ஐஏஎஸ்., சென்னையில் இன்று புதிதாக புதுப்பிக்கப்பட்ட BIS தென் மண்டல அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் கூடங்குளம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்ற்கு மேலாண்மை அமைப்புகள் சான்றிதழுக்கான உரிமத்தை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2023 2:51PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்திய தரநிர்ணய அமைவனம், தெற்கு மண்டல அலுவலகம் (SRO) முதலில் ஜனவரி 1969 இல் சென்னை G. P. சாலையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் நிறுவப்பட்டது. 1976 ஆம் ஆண்டு, BIS-தெற்கு மண்டல அலுவலகம் அதன் சொந்த கட்டிடத்திற்கு தற்போது இயங்கிவரும் CIT வளாகம், IV கிராஸ் ரோடு, தரமணி, சென்னைக்கு மாற்றப்பட்டது,தென் மண்டல அலுவலகம் மற்றும் ஆய்வக வளாகத்திற்கான கட்டிடம் ஜூலை 1976 ஆம் ஆண்டு மத்திய தொழில் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஸ்ரீ டி.ஏ.பாய் அவர்களால் சென்னையில் 12 ஜூலை 1976 அன்றைய ஐ.எஸ்.ஐ, இயக்குனர் ஜெனரல் திரு பி.எஸ்.கிருஷ்ணமாச்சாரி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ பிரமோத் குமார் திவாரி, ஐஏஎஸ்., இயக்குநர் ஜெனரல், பிஐஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தென் மண்டல அலுவலகக் கட்டிடம், ஸ்ரீ யுஎஸ்பி யாதவ்,விஞ்ஞானி-எஃப் மற்றும் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு) தலைமையில் புதுப்பிக்கப்பட்டது. புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், சிறந்த பணிச்சூழலுக்கான அனைத்து நவீன வசதிகளையும், நவீன பயிற்சி/மாநாடு நிகழ்வுகளை கருத்தில் கொண்ட அறைகளையும் கொண்டுள்ளது. இந்த கட்டிடம் தென் மாநிலங்களின் பல்வேறு கலாச்சாரங்கள் / பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் இறுதி கட்டத்தில் உள்ளது.
ஸ்ரீ பிரமோத் குமார் திவாரி, ஐஏஎஸ்., இயக்குனர் ஜெனரல், BIS இன்று 01 ஜூன் 2023 அன்று புதிதாக புதுப்பிக்கப்பட்ட தென் மண்டல அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் தர மேலாண்மை அமைப்புகள் (QMS), சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்புகள் (EMS) & தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகள் (OHSMS) ஆகியவற்றிற்கான உரிம சான்றிதழை , திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் – அணுசக்தி கழகம் இந்தியா லிமிடெட் (Unit I & II ) க்கு வழங்கினார். கூடங்குளம் அணுசக்தி கழகம் இந்தியா லிமிடெட் சார்பாக, ஸ்ரீ டி பிரேம் குமார், தள இயக்குநர் & ஸ்ரீ எல் ரிச்சர்ட், பயிற்சி கண்காணிப்பாளர் & மேலாண்மைப் பிரதிநிதி -ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு , DG BIS இலிருந்து உரிமத்தைப் பெற்றனர். உரிமம் வழங்கும் விழாவில் ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி-எஃப் & துணை இயக்குநர் ஜெனரல் (தென் மண்டலம்) மற்றும் BIS தெற்கு மண்டலத்தின் கிளை அலுவலகங்களின் தலைவர்கள் உடனிருந்தனர்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1928973)
வருகையாளர் எண்ணிக்கை : 169