சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலையத்தின் புதிய  இயக்குநராக சி.வி. தீபக் பதவியேற்றார்

Posted On: 29 MAY 2023 8:04PM by PIB Chennai

திரு சி.வி. தீபக் 27.05.2023 அன்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அவர் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநராக திரு எஸ்.எஸ்.ராஜுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதுவரை, புதுதில்லியில் உள்ள கார்ப்பரேட் தலைமையகத்தின் (நிதி மற்றும் கணக்குகள்) வரிவிதிப்பு பிரிவு பொது மேலாளராக திரு. சி.வி. தீபக் பதவி வகித்தார்.

இதற்கு முன்பு, 2015 ஜூன் முதல் 2021  ஜனவரி  வரை சென்னை விமான நிலையத்தில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்குகள்) பணியாற்றியுள்ளார்.

     

***

SM/PKV/KRS


(Release ID: 1928145)
Read this release in: English