சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சாகர் பரிக்ரமா திட்டம் ஆறாம் கட்டம்

Posted On: 29 MAY 2023 7:30PM by PIB Chennai

மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு ‘சாகர் பரிக்ரமா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சாகர் பரிக்ரமாவின் ஆறாம் கட்டம் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்திலிருந்து தொடங்கியது.

 

சாகர் பரிக்ரமாவின் ஆறாம் கட்டத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா கோடியாகாட்டில் தொடங்கி வைத்தார். அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேச நிர்வாகம், மத்திய அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், மீன்வளர்ப்புக்கான ராஜீவ் காந்தி மையம், (RGCA) மற்றும் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA), இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம் மற்றும் மீனவர்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சி பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனவர்கள் மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலாவுடன் கலந்துரையாடினர். அவர்கள் தங்களது பிரச்சனைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.

        

 

 

 

 

 

 

இதனைத் தொடர்ந்து, விவேகானந்தப்பூர், குட்டி அந்தமான், ஹட்பே ஆகிய இடங்களில் உள்ள மீன் இறங்குதள மையங்களுக்கு மெய்நிகர் வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. திரு.பர்ஷோத்தம் ரூபாலா, பிரதமரின் மத்ஸய சம்பதா திட்டத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் மீன்பிடித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நவீன மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் மீன்களின் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். இத்திட்டம், மீன் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் ஆகிய இரண்டு துறைகளிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மத்ஸய சம்பதா, விவசாயிகள் கடன் அட்டை போன்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

     

 

 

 

 

 

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சாகர் பரிக்ரமா ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்), விவசாயிகள் கடன் அட்டை (கேசிசி) போன்ற மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சாகர் பரிக்ரமா ஆதரவளிக்கும்.

***

AD/CR/KRS



(Release ID: 1928138) Visitor Counter : 77


Read this release in: English