சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம்
Posted On:
18 MAY 2023 7:57PM by PIB Chennai
சென்னை விமான நிலையம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானங்கள் வேகமாக வெளியேறுவதற்கான 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 36 இயக்கங்களிலிருந்து 45-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த இரண்டு டாக்ஸிவேக்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சீராக அதிகரித்து வருவதால், உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. இந்த டாக்ஸிவேக்கள் மூலம் நெரிசல் மிக்க நேரங்களில் விமானங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க முடியும்.
சென்னை சர்வதேச விமான நிலையம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதில் எப்போதும் உறுதியாக உள்ளது. மேற்கூறிய திட்டங்களின் தொடக்கமானது, விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன், விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பயணிகள், விமான நிறுவனங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளில் ஒன்றாகும்.
*விரைவாக வெளியேறுவதக்கான டாக்ஸிவே - விமானம் ஓடுபாதையில் இருந்து அதிக வேகத்தில் வெளியேற அனுமதிக்கும் கோணத்தில் ஓடுபாதைகளுடன் இணைக்கப்பட்ட டாக்ஸிவேக்கள்
** டாக்சிவே ஒரு டாக்ஸிவே என்பது விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையே ஒரு இணைப்பை வழங்குவதாகும்.
*******
(Release ID: 1925315)
Visitor Counter : 163