சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தபால் நிலையங்களில் விளம்பரம் காட்சிப்படுத்தும் வசதி
प्रविष्टि तिथि:
16 MAY 2023 3:46PM by PIB Chennai
அஞ்சல் துறை அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அஞ்சல் அட்டைகள், உள்நாட்டுக் கடித அட்டைகள், சேமிப்புப் புத்தகம் போன்றவற்றின் மூலமும், வெள்ளைப் பலகைகள், பதாகைகள், ஸ்டாண்டீகள், சியோஸ்க்கள், விதானம் மற்றும் குடை போன்றவற்றின் மூலமும் விளம்பரம் செய்வதற்கான ஊடகமாக உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட தபால் நிலையங்களில் வைக்கப்பட்டள்ள எல்இடி டிவிகளில் விளம்பரம் காட்சிப்படுத்தும் வசதியும் உள்ளது.
கொவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், தண்ணீரைச் சேமித்தல், ஸ்வச் பாரத் மிஷன், பெண் குழந்தைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கண்ட விளம்பர சேனல்கள் அரசு நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகின்றன.
அஞ்சல் துறையால் வழங்கப்படும் மேற்கண்ட ஊடக அஞ்சல் சேவைகளைப் பெற, அருகிலுள்ள தபால் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது விசாரணைகளை tnbdcell[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
***
(रिलीज़ आईडी: 1924489)
आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English