சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் பகுப்பாய்வு கணினி மையம் நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2023 6:54PM by PIB Chennai
உயர் தொழில்நுட்ப தரவுகள் பகுப்பாய்வு நடைமுறையின் மூலம் மக்கள் தொகை தரவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இருந்து செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககத்திற்கும், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்விக் கழகத்திற்கும் இடையே இன்று (11.05.2023) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககத்தின் இயக்குநர் திரு சஜன்சிங் ஆர் சவான், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி அகிலா ஆகியோர் கையெழுத்திட்டனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு பணி நிலையத்தின் இணைப்பு அலுவலர் திரு ஃபைசல் அகமது உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மைக்ரோ அளவிலான புள்ளி விவரங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காணுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது, அதுபற்றிய தகவல் சேகரிப்பின் வழிமுறையை மேம்படுத்த உதவுதல் ஆகியவற்றுடன் இந்த கணினி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் கால மென்பொருட்களை முழுமையாக கொண்டிருப்பதோடு, எஸ்பிஎஸ்எஸ், எஸ்டிஏடிஏ போன்ற புள்ளி விவரங்கள் சார்ந்த மென்பொருளையும் இது கொண்டிருக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதோடு, ஆய்வு முடிவுகள் திட்டமிடுவோருக்கு தகவல் அளிக்கும் கருவியாகவும் அமையும்.

***
SMB/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1923451)
வருகையாளர் எண்ணிக்கை : 132