சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள்

Posted On: 08 MAY 2023 5:55PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினக் (ஜூன் 5)  கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மிஷன் லைப் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால்  இன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

1. இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம் (என்.எம்.என்.எச்):

 மிஷன் லைப் திட்டம் குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, அர்வாச்சின் பாரதி பவன் மூத்த மேல்நிலைப் பள்ளியிலும், டெல்லியிலுள்ள எஸ்.எல்.எஸ்.டி.வி. பப்ளிக் மேல்நிலைப்பள்ளியிலும், இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  293 மாணவர்கள் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதாக உறுதியளித்தது.

2. இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்:

மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் தரிதி பானர்ஜியின் தலைமையில், கொல்கத்தாவிலுள்ள விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் சுமார் 100 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்த மாட்டோமென உறுதிமொழி எடுத்தனர்.

3. ஜிபி பந்த் தேசிய இமயமலை சூழலியல் நிறுவனம்:

 

தேசிய இமயமலை சூழலியல் நிறுவனம் 2023 மே 8ம் தேதி நடத்திய மிஷன் லைப் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என மொத்தம் 40 பேர் பங்கேற்றனர்.

4. நிலையான கடலோர மேலாண்மை தேசிய மையம் (என்.சி.எஸ்.சி.எம்):

சென்னை நகரில் உள்ள அடையாறு நதிக்கரையில் என்.சி.எஸ்.சி.எம் தூய்மைப்படுத்தும்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பல்வேறு வயதினரைச் சேர்ந்த சுமார் 65 பேர் அடையாறு நதிக்கரையிலிருந்து சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இந்த கழிவுகளில் 130 கிலோ பயனற்ற மீன்பிடி வலைகள் ஆகும். மீதமுள்ளவை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும். சேகரிக்கப்பட்ட கழிவுகள் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, என்சிஎஸ்சிஎம் விஞ்ஞானிகள் பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் மிஷன் லைஃப் திட்டத்தின் சின்னம் ஆகியவற்இன் மூலம் மீனவர்களிடையே மிஷன் லைப் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

----

AP/CR/KPG

 


(Release ID: 1922592) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi