சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி-யில் நவீன ஆராய்ச்சி ஆய்வகத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்

Posted On: 27 APR 2023 4:27PM by PIB Chennai

சென்னை ஐஐடி-யில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆராய்ச்சி ஆய்வகத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ஐஐடி-யின் இயக்குநரும்  பேராசிரியருமான வி காமகோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி-யின் 1985-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த மாணவரான திரு பிரதாப் சுப்பிரமணியம், இந்த ஆய்வகத்தை அமைப்பதற்காக ரூ.6.76 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் டிஜிட்டல் இந்தியா இயக்க முன்னெடுப்பு தொடங்கப்பட்ட எட்டரை ஆண்டுகளில் சந்தேகமின்றி, மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உலகில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது என்று கூறினார்.

பின்னர் பேசிய சென்னை ஐஐடி இயக்குநரும் பேராசிரியருமான வி காமகோடி, இந்த ஆராய்ச்சி வசதியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். செமி கண்டக்டர் இயக்கம் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரியான நேரத்தில் இந்த மையத்திற்காக நிதி பங்களிப்பு செய்த திரு பிரதாப் சுப்பிரமணியத்திற்கு பெரிய நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதாப் சுப்பிரமணியம், சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் பல்வேறு உபகரணங்களில் எவ்வாறு மென்பொருள் தயாரிப்பது என்பது குறித்து காண விரும்புவதாக தெரிவித்தார்.

 

 

***

AD/IR/RS/KRS


(Release ID: 1920249) Visitor Counter : 169


Read this release in: English