சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை ஐஐடி கட்டணமில்லாமல் இணையவழி கணிதப் பாடவகுப்பைத் தொடங்குகிறது

இந்தப் பாட வகுப்பில் 3-ம் மற்றும் 4-ம் நிலைக்கான பதிவுகள் 2023 மே 7 அன்று முடிவடையும்

Posted On: 25 APR 2023 3:09PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்பு சிந்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (ஐஐடி) 3 மற்றும் 4-ம் நிலை கணிதப் பாட வகுப்புகளை தொடங்கவுள்ளது.

 சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மூலம் கட்டணமில்லாமல்  இணையவழி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இறுதித் தேர்வு தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படும். இந்த வகுப்புகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும்  நடத்தப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் https://pravartak.org.in/oobtregistration_math  என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். 3-ம் மற்றும் 4-ம் நிலைகளுக்கான பதிவுகளுக்கு 2023, மே 7-ந் தேதி கடைசி நாளாகும்.

***

AD/SMB/AG/KRS

 (Release ID: 1919524) Visitor Counter : 174


Read this release in: English