சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

துவாரகையில் தமிழர்கள் ‘ஆவோ, ஆவோ’ என்றும் குஜராத்திகள்‘வருக வருக’ என்றும் கூறி உற்சாகம்

குஜராத்தி இலக்கிய மேதைகள் ஜாவர்சந்த் மெகானி மற்றும் கவிஞர் கலாபியின் இலக்கிய பங்களிப்புகளை கேட்டு தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் மகிழ்ந்தனர்

தமிழ் இலக்கிய அறிஞர்களான கணியன் பூங்குன்றனார் போன்றவர்கள் பற்றி குஜராத்திகள் அறிந்து கொண்டனர்

துவாரகையில் நடைபெற்ற மொழி பயிலரங்கில் தமிழைக் கற்றுக்கொண்ட குஜராத்திகளுக்கும், குஜராத்தியைக் கற்றுக்கொண்ட தமிழர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

Posted On: 25 APR 2023 1:33PM by PIB Chennai

சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தின்  ஆறாவது நாள் நிகழ்ச்சியில், துவாரகையில் மொழி பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குஜராத்தி அரசின் ஸ்கோப் நிறுவனம்,  அகமதாபாத் தமிழ்ச் சங்கம், ஜூனாகத்தில் உள்ள  நர்சின்ஹ் மேதா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்தன. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக பயணிகள் கலந்துகொண்டு குஜராத்தி மொழியின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சில சொற்களை கற்றுக்கொண்டனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வந்திருந்த பெண்கள் குஜராத்தி மொழி போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டு அதை கற்றுக்கொண்டு பயனடைந்தனர்.

இந்த மொழி பயிலரங்கத்தில் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள்  கற்றுக்கொடுக்கப்பட்டன. “ஜெய் ஜெய் கர்வி குஜராத்”, “தமே கெம் சோ” (எப்படி இருக்கிறீர்கள்), “ஆவோ ஆவோ” (நல்வரவு) போன்ற குஜராத்திச் சொற்கள் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன. சில தமிழ்ச்சொற்களும், குஜராத்தி மக்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன. குஜராத்தி மொழி வார்த்தைகளை தமிழுக்கு மொழிப்பெயர்க்கும் போட்டியில் குஜராத் மக்கள் பங்கேற்றனர்.

 

குஜராத்தைச் சேர்ந்த தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளான ஜாவர்சந்த் மெகானி மற்றும் கவிஞர் கலாபி தொடர்பான தகவல்கள் தமிழர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. கணியன் பூங்குன்றனார் போன்ற சங்கக் கால தமிழ் கவிஞர்கள் தொடர்பாக குஜராத்திகள் அறிந்து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த சௌராஷ்டிராவினர் இந்த பயிலரங்கில்  மிகுந்த உற்சாகத்துடன்  பங்கேற்றனர்.

AD/PLM/RS/KRS


(Release ID: 1919487) Visitor Counter : 136


Read this release in: English