சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சௌராஷ்டிரா – தமிழ்நாடு இடையேயான உறவைக் கொண்டாடும் “சௌராஷ்டிரா தமிழ் சங்கமயுகம்” நூல் வெளியிடப்படவுள்ளது

ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் தனித்துவ முயற்சி

“சௌராஷ்டிரா தமிழ் சங்கமயுகம்” என்பதற்கு பிரபல கவிஞர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர்

प्रविष्टि तिथि: 24 APR 2023 5:08PM by PIB Chennai

சௌராஷ்டிரா தமிழ்நாடு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க  உறவைக் கொண்டாடும் வகையில், குஜராத் மாநிலம் வேராவலில் உள்ள ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தால் சோம்நாத்- ராமேஸ்வரம் சங்கம அஷ்டகம் என்ற பாடல்கள் நூலாகத்  தொகுக்கப்பட்டுள்ளன.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த நூல் பிரபல கவிஞர்களின் பாடல் தொகுப்பாகும். இந்தப் பாடல்கள் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நேரடி அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்கும் தனித்துவம் கொண்டவை.  நாடு முழுவதிலுமிருந்து பிரபல அறிஞர்கள் பாடல்களை ஒரு தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தி இந்த கலாச்சார நிகழ்வுக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) மற்றும்  ஒரே இந்தியா உன்னத இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும்  இந்தப் பகுதியில் உள்ள இணைப்பு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞர்கள் ஒருங்கிணைந்து கலாச்சார, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தமிழ்நாட்டிற்கும், குஜராத்திற்கும் இடையேயான பாரம்பரிய உறவை உயிரோட்டமாக வைத்துகொள்ளும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற செயல்பாடுகளுக்கு இந்தப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.  சமஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களின் முக்கியத்துவத்திற்கு அடித்தளமாக விளங்கும் இந்த பல்கலைக்கழகம் தனிநபர்களை மட்டும் வளர்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறையை வளர்க்கிறது என்று  இதன் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

  

***

AD/SMB/AG/RR


(रिलीज़ आईडी: 1919205) आगंतुक पटल : 133
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English