நிதி அமைச்சகம்
புதிய ஜிஎஸ் 2026, புதிய ஜிஎஸ் 2030, 7.41 % ஜிஎஸ் 2036, 7.40 % ஜிஎஸ் 2062 ஆகியவற்றின் வெளியீடு/ மறுவெளியீடு விற்பனைக்கான ஏலம்
Posted On:
10 APR 2023 7:08PM by PIB Chennai
சீரான விலை மாதிரியை பயன்படுத்தி ஏலம் விடும் வகையில் (i) ரூ.8,000 கோடிக்கு புதிய அரசு பங்குப்பத்திரம் 2026 (வெளியீடு/மறுவெளியீடு) விற்பனைக்கான அறிவிப்பு, (ii) ரூ. 7,000 கோடிக்கான புதிய அரசு பங்குபத்திரம் 2030, (iii) ரூ.12,000 கோடிக்கான 7.41 % அரசு பங்குபத்திரம் 2036, (iv) ரூ.12,000 கோடிக்கான 7.40 % அரசு பங்குபத்திரம் 2062 ஆகியவற்றின் வெளியீடு பற்றி மத்தியஅரசு அறிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பங்குப்பத்திரத்துக்கும் ஈடாக ரூ.2,000 வரை கூடுதல் சந்தாவை தக்கவைத்துக்கொள்ளும் விருப்பத்தை மத்திய அரசு பெற்றிருக்கும். மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி 2023, ஏப்ரல் 13 (வியாழனன்று) இந்த ஏலங்களை நடத்தும்.
இந்தத் தேதியில் போட்டியல்லாத ஏலக்கேட்புகள் காலை 10.30 மணிக்கும், 11 மணிக்கும் இடையே சமர்ப்பிக்கப்படவேண்டும். போட்டியுடன் கூடிய ஏலக்கேட்புகள் காலை 10.30 மணிக்கும், 11.30 மணிக்கும் இடையே சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஏலத்தின் முடிவுகள் அதேநாளில் அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற ஏலக்கேட்பாளர்களால் 2023 ஏப்ரல் 17 அன்று தொகை செலுத்தப்படவேண்டும்.
***
AD/SMB/RS/KPG
(Release ID: 1915430)