குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாவீர் ஜெயந்தியையொட்டி குடியரசு துணைத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2023 5:27PM by PIB Chennai

மகாவீர் ஜெயந்தியையொட்டி குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் மகாவீரரின் போதனைகள் நம்முடைய வாழ்க்கையை சரியான பாதையில் தூய்மையானதாகவும், இரக்கம் மிக்கதாகவும் வழிநடத்திச்செல்லும் உந்துதலை அளிக்கிறது. சரியான நம்பிக்கை, சரியான அறிவாற்றல் மற்றும் சரியான நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டதாக  நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவும், நம்முடைய குறிக்கோள்களை புதுப்பித்துக்கொள்ளவும் மகாவீர் ஜெயந்தி வாய்ப்பளிக்கிறது.

பகவான் மகாவீரரின் கொள்கைகளுக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்டு இரக்கமும், உண்மையும் நிறைந்த சகிப்புத்தன்மையும் வழிநடத்தும் உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்.

 

***

AP/ES/RS/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1913394) வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Manipuri , Punjabi