பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் ராணுவத் தளபதி

प्रविष्टि तिथि: 02 APR 2023 2:28PM by PIB Chennai

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2023-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நான்கு நாள் பயணத்தின் போது, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆஸ்திரேலியாவின் மூத்த ராணுவத் தலைமை அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளார்.

 

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளின் பல்வேறு சேவைகளைச் சேர்ந்த மூத்த ராணுவ உயரதிகாரிகளுடன் மனோஜ் பாண்டே உரையாடவுள்ளார். ஆஸ்திரேலிய ராணுவத் தலைவருடன் கலந்துரையாடுவதுடன், ஆஸ்திரேலிய விமானப்படைத் தலைவருடனும் அவர் உரையாடவுள்ளார். இவர் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.

 

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வருகின்றன. மூத்த அதிகாரிகளின் பயணங்கள், இரு தரப்பு பயிற்சிகள் போன்றவை இதில் அடங்கும்.  ராணுவத் தளபதியின் ஆஸ்திரேலியப் பயணம் இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

**********

AD/CR/DL


(रिलीज़ आईडी: 1913096) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी