சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், இளைஞர் மற்றும் அவர்களது நலவாழ்வுக்கான முதலாவது தேசிய மாநாட்டை நடத்தியது

प्रविष्टि तिथि: 30 MAR 2023 5:17PM by PIB Chennai

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், இளைஞர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான முதலாவது தேசிய மாநாட்டை 2023 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் இணையதளம் வாயிலாக நடத்தியது. இளைஞர்கள் மற்றும் அவர்களது  நலவாழ்வு தொடர்பான சிக்கல்கள், பிரச்சனைகள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கும் நோக்கில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இளைஞர்களும் ஆரோக்கியமும், இளைஞர்களும் கல்வியும், இளைஞர்கள்- குற்றம் மற்றும் சிறார் குற்றம், இளைஞர்கள்- கண்ணியமான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு, இளைஞர்கள்- கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளம், இளைஞர் நலன்- இந்தியாவின் பார்வை என்பன போன்ற பல்வேறு துணை கருப்பொருட்களில்  விவாதங்கள் நடைபெற்றன.

இந்தக் கருத்தரங்கம்  ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர் சிப்நாத் தேப் தொடங்கிவைத்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எம் தமிழரசனின் நிறைவுரையுடன் இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் நிறைவு உரையுடன் பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் 30 ஆய்வுக் கட்டுரைகள் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

***

AD/PLM/RS/KRS

 


(रिलीज़ आईडी: 1912265) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English