ஜல்சக்தி அமைச்சகம்
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 78.77 லட்சம் கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு.
प्रविष्टि तिथि:
27 MAR 2023 8:10PM by PIB Chennai
கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் திட்டம் வாயிலாக 2023-24-ம் ஆண்டில் 19.26 லட்சம் கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் 21.76 லட்சம் (17.34 சதவீதம்) கிராமப்புற வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. 22.03.2023 வரை கூடுதலாக 57 லட்சம் கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில் 78.77 லட்சத்திற்கும்
(62.76 சதவீதம்) மேற்பட்ட வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையின்படி டிசம்பர், 2024-குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று திரு எம். முகமது அப்துல்லாவுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
AD/IR/RJ/KRS
(रिलीज़ आईडी: 1911268)
आगंतुक पटल : 303
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English