எஃகுத்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு எஃகு உற்பத்தி
Posted On:
27 MAR 2023 4:27PM by PIB Chennai
கடந்த 2018-ம் ஆண்டு முதல் உலகின் 2-வது மிகப்பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. 2019-ம் ஆண்டு முதல் உருப்பெற்ற எஃகுவின் 2-வது மிகப்பெரிய நுகர்வோராகவும் இந்தியா உள்ளது.
ரூ. 6,322 கோடி நிதி முதலீட்டுடன் கடந்த 22-07-2021 அன்று சிறப்பு எ.ஃகு உற்பத்திக்காக உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத்திட்டம் எஃகு துறையில் முதலீட்டை ஈர்த்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்தல் மூலம், நாட்டில் சிறப்பு எஃகு உற்பத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பெறுவது 15.09.2022 அன்று நிறைவடைந்தது. 35 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 79 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 நிறுவனங்களின் 57 விண்ணப்பங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய எஃகு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
AD/IR/RJ/KRS
(Release ID: 1911225)
Visitor Counter : 123