இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2023 3:44PM by PIB Chennai
அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவாஹத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ், இயக்கி, பராமரித்து, மேம்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆறு விமான நிலையங்களின் பரிவர்த்தனையின் விதிமுறைகள், நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
அதிக போட்டியை உறுதி செய்வதற்கும், ஏலதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும், பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. விமான நிலைய பராமரிப்பில் முன் அனுபவம் தேவை இல்லை, பங்கேற்கும் நிறுவனம் ஏலம் எடுக்கக்கூடிய விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, வருவாயைப் பகிர்வதற்குப் பதிலாக ஏல அளவுருவாக ஒரு பயணிக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
AD/PKV/AG/KRS