சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர்வதற்கான சியூஇடி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Posted On: 24 MAR 2023 5:50PM by PIB Chennai

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வான சியூஇடி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை இணைய தளத்தில் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை 20.03.2023 முதல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 19.04.2023.

தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழகப் பொது நுழைவுத்தேர்வு சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-இன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சியுஇடி (பிஜி) – 2023-க்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

https://www.pondiuni.edu.in/admissions-2023-24/ . என்னும் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வு தாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/ என்னும் என்.டி.ஏவின் இணையதளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர், கே.மகேஷ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

SM/PLM/AG/KRS

 


(Release ID: 1910399) Visitor Counter : 111
Read this release in: English