சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு எஸ். வெங்கடேஸ்வர் சென்னையில் பொறுப்பேற்பு
Posted On:
22 MAR 2023 12:52PM by PIB Chennai
1989-ஆம் ஆண்டின் இந்திய தகவல் பணி (ஐ.ஐ. எஸ்) அதிகாரியான திரு எஸ்.வெங்கடேஸ்வர், மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை தலைமை இயக்குநராக இன்று (22.03.2023) சென்னையில் பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநராக பதவி வகித்த போது, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, லட்சத்தீவு, அந்தமான்-நிக்கோபார், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள அமைச்சகத்தின் அலுவலகங்களுக்கும் அவர் தலைமை பொறுப்பு வகித்தார்.
தமது 35 ஆண்டு கால பணிக்காலத்தில், தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் துறையில் அனுபவச் செழுமை மற்றும் நிபுணத்துவத்தை திரு வெங்கடேஸ்வர் பெற்றிருக்கிறார்.
தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பர இயக்குநரகம் ஆகியவற்றில் பல்வேறு உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார். ஆந்திரப்பிரதேச அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஆணையராகவும் திரு வெங்கடேஸ்வர் பணியாற்றியுள்ளார்.
***
(Release ID: 1909459)
Visitor Counter : 173