சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனநல பிரச்சனை

प्रविष्टि तिथि: 21 MAR 2023 3:58PM by PIB Chennai

2022-23ம் நிதியாண்டில் போதைப்பொருள் தேவைக் குறைப்புக்கான தேசிய அளவிலான அதிரடி திட்டத்திற்கு  ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மனநல காப்பகங்களை நடத்துவது உள்ளிட்ட ஆந்திராவைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.2.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மனநலம் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக 71 ஓடிஐசி மையங்களை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முக் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், இதுவரை 9.54 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3.12 கோடி பேர் இளைஞர்கள், 2.08 கோடி பேர் பெண்களாவர்.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்  சுஸ்ஸ்ரீ பிரதீமா பௌமிக் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

***

SM/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1909293) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English